ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், 7783 அங்கன்வாடி ஊழியர்களின் நேரடி பணிநியமனத்திற்கு ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . தமிழ்நாடு அரசாணை வெளியீடு

எங்கள் சேவைகள்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், உலகின் மிகப்பெரிய சமூக அடிப்படையிலான திட்டமாகும். இத்திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி, சுகாதாரம், தன்சுத்தம், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான மைய இடமாகும். இங்கு ஊட்டச்சத்து பாதிப்பின் முக்கியமான காலங்களில் கவனம் செலுத்தி தொடர்ச்சியான பராமரிப்புடன், நிலையான வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையை செயல்படுத்துகிறோம்.

1975 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 106 வது பிறந்தநாளில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பேரின் 33 வட்டாரங்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை (நகர்ப்புறம்), நிலக்கோட்டை (கிராமப்புறம்) மற்றும் தளி (பழங்குடி) ஆகிய மூன்று வட்டாரங்களில் முன்மாதிரி திட்டமாக தொடங்கப்பட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. "ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு" என்ற இலக்கை எட்டுவதே நமது மாநிலத்தின் கொள்கையாகும்.

ஒரு குடையின் கீழ் (UMBERLALLA ICDS)

2016-2017 நிதியாண்டில் இந்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட ICDS -யை ஒரு குடையின் கீழ் திட்டமாக மாற்றியது. இந்திய அரசு 2017 ஆம் ஆண்டில், தேசிய ஊட்டச்சத்து குழுமம் (NNM), பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY), மற்றும் ஒரு குடையின் கீழ் ICDS -யில் உள்ளடக்கிய துணை திட்டங்கள் பின்வருமாறு

  • 1. அங்கன்வாடி சேவைகள்.

  • 2. வளர்இளம் பெண்களுக்கான திட்டம்.

  • 3. குழந்தை பாதுகாப்பு சேவைகள்.

  • 4. தேசிய குழந்தைகள் காப்பக திட்டம்.

  • 5. போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்).

  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) - பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் தடுப்பு மருந்து மூலம் 2018-2019 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து உணவு

மதிய உணவின் தினசரி பட்டியல்

தொடர்புடைய அமைப்புகள்

SIGN IN

with your social network
or